அம்மா....................................
உங்கள் கால்களில் விழுந்து மன்னிப்புக்கேட்கிறேன்..
இதயமில்லா இக் கயவர் கூட்டத்தில் இருந்து உங்களைக் காக்க முடியவில்லை...
ஓநாய்க்கூட்டத்திற்கு தாயை பலிக்கொடுத்து பரிதவிக்கும்
ஆட்டுக்குட்டியின் வலி......!!!
நாடற்ற குடிகளுக்கு
நிகரற்ற தலைவனைக் கொடுத்த உங்களை
அரவணைக்க முடியாமல்
நாதியற்று போய் கிடக்கிறோம் ....
தமிழின தலைவனும் (!), தென்னாட்டு பிரபாகரனும்
சாமரம் வீசி உறங்க,
உயிர்களில் விரிசல் விழ விழித்திருக்கிறோம்...
அண்ணன்களின் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கவும் தெம்பின்றி,
காய்ந்து போன கண்ணீர் சுவடுகளுடன் காத்திருக்கிறோம் !!!
தோள்கள் வலித்தாலும்,
நாடெங்கும் உன்னை தூக்கி நடப்போம்
நீ நலம் பெறும்வரை.
துக்கங்கள் கிழித்து
கருவிழியும் பொசுங்கி,
கண்ணீரும் வற்றி விட்டது, நீயில்லாமல்............
மீண்டு(ம்) வருவாயா ???
இப்படிக்கு,
துரோகிகளுக்கு தாயை பறிக்கொடுத்த புதல்வர்களும், புதல்விகளும்..... இளம்புலி ;-(
No comments:
Post a Comment