இலங்கையில் பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்பட்ட கொடூர விமான தாக்குதலில் கொல்லப்பட்ட இளஞ்சிறார்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் !!!!!!
இப்படுகொலையினைப் பற்றி NESHOR எனப்படும் வடக்கிழக்கு பிராந்தியத்துக்கான மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள ஆதார அறிக்கைகள் , காணொளிகள் !!!
இதைக் கண்டபின் அச்சம்பவத்தை கண் முன் நிறுத்தி கூறுங்கள் ,
ஏன் தமிழீழம் கேட்க கூடாதென்று !!!!!!!!
ஆங்கிலத்தில் : MASSACRE of ROSE BUDS
aNESHOR அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகள் :
Sensolai.pdf Type : pdf |
14.08.2006 அன்று .........
134 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிறீலங்கா வான்படையை சேர்ந்த 4 ' கிபிர் ' இரக விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
உலக அமைதி மற்றும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், விமானங்கள் அவ்விடத்தை குறிவைத்தே தாக்கியதாகவும் , அப்பகுதியில் கிட்டத்தட்ட 10 குண்டுகள் விழுந்த பள்ளங்களையும் , சில வெடிக்காத குண்டுகளையும் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளனர் . மேலும், குண்டு விழுந்த இடங்களில் புலிகளின் இராணுவ நடமாட்டமோ அல்லது ஆயுத கட்டமைப்புகளோ இல்லையென்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் இறந்த மற்றும் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில் இருந்து இரண்டு நாள் முதலுதவி பயிற்சிக்காக வந்திருந்தனர் .
அனைவரும் 16 - 18 வயது வரை நிரம்பிய சிறார்களாவர் .
இறந்தவர்களில் 51 பேர் மாணவர்கள் , நான்கு பேர் பணியாளர்களாவர்.
இந்த இடமானது சுனாமி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு , பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பெண்பிள்ளைகளுக்கான காப்பகமாகும்.
இதை , இராணுவ தரப்பு ' புலிகளின் சிறார் பிரிவு இராணுவத்தின் பயிற்சி மையம் ' என்று குற்றம் சாட்டி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது !!!
இதைப்பற்றிய ஒரு முழுமையான பதிவு - ஆதாரங்களுடன் . . . .
இங்கே சொடுக்குக :
No comments:
Post a Comment