Friday, April 8, 2011

சே குவேராவும் , இந்திய போராட்டமும் !!!

' VICTORY for INDIA '  
' PEOPLE of INDIA WON '

. . . சில மணித்துளிகளாக தொலை ஊடகங்கள் எங்கும் திரை நிரப்பிக்கொண்டிருந்தன இவ்வார்த்தைகள் !
முகநூலிள் கூட எக்கசக்க ' பகிர்வுகள் ' மொய்த்திருந்தன !!!
சாரு அண்ணனின் வலைதளத்தில் ' ஞாநி '  ஏதோ எழுதியிருந்ததாக ' மனுஷ்யப் புத்திரன் ' அவர்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் . !!!



ம்ம்ம்.....

கிட்டத்தட்ட நான் நினைத்திருந்ததை முழுதாக உணர்ந்து எழுதியிருந்தது போலிருந்தது அப்பதிவு .
அதன் சுருக்கம் இதுதான் ,
' அன்னா ஹசரே அவர்கள் இந்த போராட்டத்தில் இறப்பதற்கு முன்பு , மணிப்பூர் என்றொரு மாநிலமும் , ஐரோம் ஷர்மிளா என்றொரு அறியப்படாத கதாநாயகி இருப்பதையும் அவருக்கு யாராவது முதலில் கற்றுக் கொடுங்கள் !!!!  '



சரி ... வழக்கம் போல ஊருக்கு ஏதோ சொல்ல வருகிறார் என்றால் , அதுதான் இல்லை . இவ்வளவு நாள் விட்டுவிட்டு ஏன் இப்போது ஊழலைப் பற்றி தீவிரமாக போராட வேண்டும் ???!! ஐரோம் ஷர்மிளா கோரிக்கை போன்ற மிக முக்கிய பிரச்சினைகள் இருக்கும்போது , ஏன் அவர் ஊழலை மட்டும் முன்னிறுத்தி போராட வேண்டும் ???! என்பது போன்ற கேள்விகளை முன் வைக்கிறார் திரு .ஞாநி .

அதுவும் சரிதான். சிலருக்கு இதே கேள்விகள் குடைந்துக் கொண்டிருந்தன . குடைந்துக்கொண்டிருகின்றன .

ஆனால் , ஈழ பிரச்சினையில் ' ஞாநி ' அவர்களின் யோக்கியதையை நான் நேரடியாக கண்டு கொண்டதால் , அவர் எழுதிய எதையும் ' முன்னிறுத்தவோ , சுட்டிக்காட்டவோ ' விரும்பவில்லை !!!

சக தோழர்கள் அன்னா ஹசரேவின் இப்போராட்டத்தில் என்னை ஈடுபட சொன்னபோது , வெகு வருடங்கள் கழித்து மிக்க ஆர்வத்துடன் ' இந்தியர்களுக்காக ' போராட தயாரானேன். 
என்னுடன் கைக்கோர்த்த பெரும்பாலான தோழர்கள் இந்திய அனுதாபிகள் என்றாலும் வெகு சிலரை ஏற்கனவே ' ஈழப் போராட்டத்தில் ' கண்டிருக்கிறேன் .
' நானும் ஹசரேவுடன் சேர்ந்து உண்ணா நிலைப் போராட்டத்தை ஆதரிக்க போகிறேன் ' என்று கிளம்பியவர்களேல்லாம் , ' தேர்தல் ஆணையத்தின் ' முரட்டு முறைப்பு கண்டு சட்டென்று திரும்பி வந்தனர்.

ஆனால், எப்படியோ .......... நாளை காலை 10 மணியளவில் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டு விட்டது. அரசாங்கமும் 50 - 50 பங்கு என்ற கணக்கில் , இக்கோரிக்கையினை ஏற்றுக் கொண்டுவிட்டது.
(  இவ்வொப்பந்தத்தை பற்றி பின்னர் விரிவாக தெரிவிக்கிறேன் ! )
சீக்கிரம் முடியப்போகிறது போராட்டம் , வெற்றியுடன் !!!!!!!

சரிங்க..... 

பிரிக்கப்போற பந்தலையும் , மேடையையும் கொஞ்ச நேரத்துக்கு விட்டுடுங்க,
எனக்கும் , இந்தியர்களுக்கும் ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கு !!!
ஏன் இப்பவேன்னா,
இதுக்கப்புறம் எப்போ உங்களையெல்லாம் இப்படி ஒத்துமையா பார்க்க போறேன்னு தெரியல . . . !!!!

' ஐரோம் ஷர்மிளா '
' முந்தைய நாட்களில் , பல நாட்கள் பத்திரிகைகளில் இப்பெயர் வந்தபோது பத்தோடு பதினொன்றாக படித்து விட்டு சென்றிருக்கிறோம் '
ஊடங்கங்கள் பெரிதுபடுத்தி காட்டியபோதும் , ஏதும் பேசாமல் மௌனம் காத்தோம் !!!
சரி . . .
அப்பொழுதெல்லாம் வராத இந்த ஒற்றுமை ஏன் , எப்படி கண்ணுகளா இப்போ மட்டும் வந்தது ??!

' ஐரோம் ஷர்மிளா ' என்னும் இவ்வீர பெண்மணியின் கடந்த கால வரலாற்றினைக் கேட்டால் மெய்சிலிர்க்கும்.
நவம்பர் 4 - 2000
ஆயுதப்படைகளுக்கு ஆதரவாக இயற்றப்பட்ட விசாரணையின்றி சுட்டுக் கொல்லும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நவம்பர் 2 - 2000 அன்று மாலொம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 10  அப்பாவி பொதுமக்களை துப்பாக்கி சூட்டில் கொன்ற பாதுகாப்பு படையினரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் ,  அரசாங்கத்தின் மீது பெரிதும் வெறுப்படைந்த ஷர்மிளா ,  இப்போராட்டத்தினை கையிலெடுத்தார் .

ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு சொட்டு நீர் கூட தொண்டையில் இறங்காமல் ஒரு உண்ணா நிலை போராட்டம். இவரின் போராட்டத்தைக் கண்டு பயந்து போன அரசு , கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக குழாயின் மூலம் திரவ உணவு அளித்து இவரைக் காப்பாற்றி வருகிறது !!!
இந்திய ராணுவத்தால் மணிப்பூரில் தொடரும் அட்டூழியங்களை கண்டித்து , மணிப்பூரி தாய்மார்கள் அசாம் ரைபிள் பிரிவின் தலைமையகத்தின் முன்பு நிர்வாணப் போராட்டம் நடத்தினர். அதற்கும் மசியவில்லை அரசாங்கம் !!!!







" ஏனுங் கண்ணுகளா !!!!
ஐரோம் ஷர்மிளா பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கலாம், அவங்க உண்ணாவிரதம் இருக்கிறப்போ எங்க போயிருந்தீங்க ????!!
உண்மையான இந்தியனா இருந்தா , இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மக்களுக்காகவும் போராடவும் தானே வேண்டும் ??! அதெப்படி இந்தியர்கள் எல்லாருக்கும் பொதுவான பிரச்சினை என்றால் ஒன்று கூடுவீங்க , குரல் கொடுப்பீங்க , டிவிட்டர் ல போடுவீங்க , ஆனால் , ஒரு மாநிலத்தின் மக்கள் பாதிக்கப்படும்போது , வேலைய பார்ப்பீங்களா ??! 
இந்த இலட்சணதுக்கு பேரு இரண்டாவது விடுதலைப் போராட்டமா ??! சிரிப்புத்தான் வருது போங்க !!! 
' ஊழலுக்கெதிரான போராட்டம் என்றவுடன் ஓடோடி வந்த தனவான்களே ,  அப்போ எங்கையா போயிருந்தீங்க ???!!!
ஊருக்கு பொதுவான பிரச்சினை , எல்லாரும் ஆதரிப்பாங்க , நம்ப பெயருக்கும் , புகழுக்கும் களங்கம் ஏற்படாதுன்னு உறுதிப்படுத்திக்கிட்டு தானேயா சட்டென்று கிளம்பி வந்தீங்க ??!

இவ்வளோ ஏன் ??!
இரத்தக் களறியாக்கப்பட்ட காஷ்மீர் பிரச்சினையில் தலையிடாதது ஏன் ?!
' பிரிவினைவாதி' என்று தவறாக பெயர் கேட்டுப்போய்டும் என்று தானே ?!
ஆனால் இன்று,
கும்பலோடு கும்பலாக கோவிந்தா போட்டு ஜெயிக்க முடிவெடுத்து புறப்பட்டு வந்து , நல்ல பெயரும் எடுத்தாயிற்று !!!

ஈழப்படுகொலை , தமிழக மீனவர் படுகொலைகளை பற்றித் தான் உங்களுக்கு ஒன்றும் தெரியாதே !! அப்படியே நாங்கள் பேச்செடுத்தாலும் , இந்திய இறையாண்மையை குலைத்ததாயிடும் , தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் இல்லாட்டி . . . வெகு சுலபம் - இவ்விரண்டையும் போட்டு குழப்பாதீங்க , அன்னாவின் போராட்டம் அகில இந்தியாவின் ஒட்டு மொத்த பிரச்சினைக்கான போராட்டம் .....
- இப்படியெல்லாம் எங்க பிரச்சினைய பேசினா ஒதுக்கிடுவீங்கன்னு தெரியும் . அதனால் தான் எங்களுக்கு விடை கேட்காமல் ,
' இந்திய பிரச்சினைக்கு ' விடை கேட்டேன் !!!!!!!
எப்போ இதுக்கெல்லாம் முடிவு கட்ட போறீங்க , இந்த பிரச்சினைய முடிவு கட்டினது போல ??!!

இல்லாட்டி .... அன்னா ஹசரே போராட்டத்தில் கூடவே , இக்கோரிக்கையினையும் சேர்த்துக் கொள்ளுங்க !!!! இல்லாட்டி, மறுபடியும் உங்களை இதுமாதிரி ஒண்ணு சேர்க்க முடியாது !!!!
( ஆனால் , இந்தியாவின் குடிமகனாக இருந்ததினால் , மக்களுக்கு கிடைத்திருக்கும் இவ்வெற்றியினைஅறிந்து , இப்போராட்டத்திற்காக என்னுடன் கைக்கோர்த்து என்னைவிட கடுமையாக உழைத்த தோழர்களுடன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் !! )
( பி.கு. : இக்கட்டுரை ஞாநி அவர்கள் கிறுக்கிய கூற்றோடு சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்  !  )
                                                                    
                                                                            இப்படிக்கு ,
                         ~ மானமுள்ள இந்தியத் தமிழன் ~




ஸ்ஸ்ஸ்பா.... இவனுங்க அட்டகாசம் தாங்க முடியலியே !!!!
ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் போராடினேன் .
இன வித்தியாசம் பாராமல்.
பின் இவர்கள் ஏன் மணிப்பூர் , தமிழக , காஷ்மீர் பிரச்சனைகளை விட்டுவிட்டு இதான் சமயம் என்று ' இந்தியா ' வுக்காக என்று ஒன்று சேர்ந்து போராட வேண்டும் ??!!
அப்போ அடுத்து ' தமிழக மீனவ படுகொலைகளை ' கண்டித்து ராஜ்கோட் அருகே சாலை மறியல் போராட்டம்தானே ???!!!
சுயநல போராட்டங்கள் நிலைப்பதில்லை !!!!
~ நல்ல வேளை நான் இந்தியாவில் பிறக்கவில்லை ! 

- தமிழ் சிறுவன் ~

No comments:

Post a Comment