Wednesday, March 10, 2010

புலியும் , நரிக்குட்டியும்

இலங்கையிலிருந்து ' பச்சைத்தமிழன் ' (!) :

நீங்கள் இங்கு தலைவர் என்று இங்கு குறிப்பிடுவது கடைசி யுத்தத்தில் தன் உயிர் காக்க எதிரியின் காலில் விழுந்து கதறி உயிர் பிச்சை கேட்ட அக் கோழையையா ?
அவனா உங்களுக்கு தமிழீழம் வாங்கித்தரப்போகிறான் ?

உண்மை என்னவெனின் ... 
"உங்கள் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல ! அது ஒரு பணத்துக்கான பகிரங்கப்போராட்டம் !!! இன்னும் கூறப்போனால் அது ஒருவகை களவு , பகற்க்கொள்ளை , வழிப்பறி !!!
இவற்றை இரும்புக்கரம் கொண்டு தானே அடக்க வேண்டும் !
அது தான் இங்கும் நடந்தது. 


......... :

கடைசித் துடிப்புள்ளவரை,
தன்மக்களின் விடுதலையை எதிர்நோக்கி
இறந்தானே ' மாவீரன் திலீபன் '... அவன் போட்டது வெறியாட்டமா ??

ஒற்றைக்காலோடு, தன் மக்களின் அமைதிக்காக,... See more
உலகமெங்கும் சமாதானம் தேடி சுற்றிவந்தானே.....
' SMILING TIGER ' என உலக நாடுகள், ஏன் இலங்கையே அழைத்த சுப.தமிழ்செல்வன் போட்டது வெறியாட்டமா......

இவர்களை கொன்று போட்டவர்கள் என்ன அவதாரமா ?? 

நீங்கள் பேசவில்லை தோழர்...
நீங்கள் இருக்கும் மண்ணும்,அதன் மைந்தர்களும் பேச வைக்கிறார்கள்.....

ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில், எங்கள் போராட்டம் உங்களுக்கு இப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்......

எது எப்படியோ...........
- தமிழர்களின் தாகம் ,
தமிழீழ தாயகம் -

நாங்கள் தேர்ந்தெடுத்த பாதை வேண்டுமானால்
தவறாக இருக்கலாம்...
ஆனால் எங்கள் குறிக்கோள்... ' தமிழீழம் '


நம்ப ஆளு :

நிச்சயமாக நானும் இன விடுதலைக்கான போராட்டத்தை அனுசரிக்கிறேன் தோழனே !
ஆயினும் நடந்தது எதுவுமே விடுதலைக்கான போராட்டமே அல்ல என்பது தான் என் கருத்து !

ஒரு தலைமையை வைத்துத்தான் உங்கள் போராட்டம் பற்றியோ மற்றும் அதன் வீரியம்  பற்றியோ மற்றையோர் கணிக்க முற்ப்படுவர் என்பது பொது வழக்கு ! ஆகவே நீங்கள் 'புனிதர்கள்' என்றுரைக்கும் மாவீரன் திலீபன் , சுப.தமிழ்செல்வன் என்போர்கள் தனியே போராடவில்லை ! அவர்களும் உங்கள் கேடு கெட்ட தலைவன் எனும் சாக்கடைக்குள் தானே பூத்துள்ளார்கள் ! 
சாக்கடைக்குள் பூத்த பூக்களை எவரும் சூடிக்கொள்வதில்லை ! ஆகவே அவர்கள் செய்தது தியாகம் ஆக இருப்பினும் கூட அவை உங்கள் சாக்கடைத்தலைவனால் களங்கப்படுத்தப்பட்டவை !.... 

யாருக்காக இவ் விடுதைலைப்போராட்டம் தமிழ் மக்களுக்காகவா ?
அவ்வாறு எனின் அதை அவர்களின் துணையுடன் போராட வேண்டுமல்லவா ! 
அவ்வாறு போராடுபவன் என்று கூறிக்கொள்பவன் அம்மக்களின் ஒரு அங்கமாக அல்லவா இருந்திருக்க வேண்டும் ! தன் ஆளுமைகளுக்கு உட்ப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை எனினும் அவன் தன் உறவுகளாக அல்லவா பாவித்திருக்க வேண்டும் ! 

அவர்கள் நலத்துக்காக தன் நலத்தை துறந்தவன் தானே அவர்களின் தலைவனாக இருந்திருக்க முடியும் ! ஒரு போராட்டம் எனின் தாக்குதல்கள் , இழப்புக்கள் , வெற்றிகள் , தோல்விகள் என அனைத்தும் நடந்தேறும் ; அவ்வாறான காலங்களில் தலைவன் எனப்படுபவன் களத்தின் முன்னின்று தன் மக்களை அல்லவா காக்க வேண்டும் (தன் உயிரை கொடுத்து எனினும்) !. 

இப்பொழுது கூறுங்கள் உங்கள் தலைவனோ , அவன் நாசகார படைகளோ இவ்வாறு தான் நடந்து கொண்டதா ? இல்லை ! நிச்சயமாக இல்லை !!!

இது தமிழ் மக்களுக்கான விடுதலைப்போராட்டம் அல்ல ! நடந்தது அவர்களின் பெயரால் ஒரு சுயநலவாதி தலைமையிலான ஒரு சிறு குழு தன் தலைமுறைகளுக்கான சொத்துக்களை சேர்த்து கொள்வதற்கான ' பணத்துக்கான பகிரங்க போராட்டம்' ! 

இல்லை எனின் அவன் மக்களின் வீட்டுத்தேவைகளுக்கான பொருட்களுக்கு எனினும் வரி வசூலிப்பு நடந்திருக்காது ! , அம்மக்களின் வாக்குரிமையை சண்டித்தனத்தால் அவன் எதிரி என கூறிக்கொள்ளும் தரப்புக்கு விற்று பெரும் தொகை பணத்தை தான் பெற்றிருக்க மாட்டான் ! , இறுதி யுத்தத்தில் தன்னால் கொண்டு சேர்க்க முடியாத பணத்தை யாரும் உபயோகிக்க முடியாத படி வாகனத்துடன் கொளுத்தி இருக்க மாட்டான் ! 

தமிழ் மக்களுக்காக போராடும் தலைவன் தன் மக்களுடன் மக்களாக வாழ்ந்திருப்பான் ! அவர்கள் குடிசையில் அல்லல் பட தான் சொகுசு மாளிகையில் வாழ்வானா ? , (சிறந்த தலைவன் தன் மக்களை தன் நிலைக்கு உயர்த்த வேண்டும் , இல்லையேல் அவர்கள் நிலைக்கு தான் வந்திருக்க வேண்டும் ) 
, ஒரு தலைவன் தன் குடிகளின் பார்வைக்கு ' துளி வேண்டி நிற்கையில் பெரு மழையாக வர வேண்டும் என்கிறது தமிழ் வீரக்காப்பியங்கள் ! ஆயினும் உங்கள் தலைவன் ஒரு சிறு துளியாகக்கூட இருக்க வில்லையே ! அவ்வாறு எனின் அவன் எவ்வாறு ஒரு சிறந்த தலைவன் ஆக இருந்திருக்க முடியும் ?


........  :

உண்மையை எதிர்க்க அதிகம் பேச வேண்டியுள்ளது....ம் ம் ம் .....

உமது பேச்சில், நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை..... ஆனால், காரணங்கள் வேறு......

பூட்டியிருக்கும் வீட்டுக்குள் அமர்ந்து யார்வேண்டுமாயினும் விமர்சிக்க முடியும்......

ஆனால், வீதியில் இறங்கி போராட ???

எங்கள் பணியை நாங்கள் செவ்வனே செய்து வருகிறோம்... நமக்குள் இருவேறு பாதைகள் இருப்பினும்......

நினைவில் கொள்க...... ' சேருமிடம் ஒன்றே ' .

வெள்ளைக்கொடி காட்டியது,  சிறிய நிலப்பரப்புக்குள் சுருக்கப்பட்ட மக்களை காக்கும் இறுதி முயற்சிதானே தவிர,
உயிர்ப்பிச்சைக் கேட்டு அல்ல..........

உயிரைக் குப்பிக்குள் அடைத்து போராடும் இவர்கள் ஏன் உயிர்பிச்சைக்கேட்க வேண்டும்....
உயிர்ப்பிச்சைக் கேட்டவனைக் கொள்வதுதான் 
' மாவீரன் ' (!) ராஜபக்சே வின் நீதியா ??
ஒரு மனிதனாய்க் கூட நடந்துக்கொள்ள முடியாத அவனுக்கு வக்காலத்து வேறு....

உம் பின் நின்று பேடியைப் போல் பேசுகிறானா அவன் ??!!

சுப.தமிழ்ச்செல்வனை ஏன் வான்படைக் கொன்றது ??? அந்த தியாகமும் எம்முடையது தானே ??
திலீபன் பூட்டிய அறைக்குள் உணவின்றி இறந்தானா ??? அவரைப் பெற்றவரும் தமிழ்த்தாய் தானே....??? கைகள் கட்டப்பட்டா திலீபனும், தமிழ்ச்செல்வனும் கொல்லப்பட்டார்கள் ??

ஐக்கிய நாடுகள் சபை சொல்வதை கவனியுங்கள் :
 ' LTTE's are not the cause of  WAR,
They are just the outcome of the Cause.....'

இது விடுதலைப் போராட்டம்.
பிறக்கும் குழந்தைக் கூட 
ஆயுதத்தோடுதான் பிறக்கும் .....


இறுதி வரை..............

80000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற அந்த நாயைப் ( நாய்கள் மன்னிக்க ! ) பற்றி,
ஓரிடத்திலாவது குறிப்பிட்டதுண்டா....???

தலைவனை நாங்கள் தானே பாதுகாத்தோம்....!!!
பதுங்கு குழியில் வாழ வைத்தோம்.....!!!

வாய்வார்த்தைக்கு நன்றாக சொன்னீர்கள் '' நானும் விடுதலைப்போராட்டத்தை ஆதரிக்கிறேன் "என்று.....

உண்மையாய் இருப்பினும் ,
உம் கள்வர்கள் குகையில் இருந்து கூக்குரலிடுவது
சரிவராது. வார்த்தைகள் பலனற்றுப் போகும்...

' இரசாயன தீக்குண்டுகளும்,  கொத்தாணிக்குண்டுகளும் எறியப்பட்ட வேளையில், நாங்கள் தனியொரு மனிதனாக வீதியில் இறங்கி போராடி சிறைச் சென்ற போது,
எங்கே போயிருந்தீர்கள் ???
எம் மக்கள் மீது இந்தியாவும் சீனாவும் மாறி மாறி தாங்கிகள்  ஏற்றி வளம் வந்தனவே......
எங்கே சென்றீர்கள் ??
' செஞ்சோலை ' தாக்குதல் தெரியுமோ ???
பூக்கள் வெடிமருந்தில் கருகியதை கண்டிருக்கிறீரா ??
தொலைக்காட்சிகளில் எம் மக்கள் மரணம் கண்டு களித்தீரோ ???

நியாயம் பேசுவதற்கே ஒரு யோக்கியதை வேண்டும் தோழரே.....

ராஜபக்சே ( தூ !) கும்பலில் இணைந்துக் கொண்டு,
யார்வேண்டுமாயினும் பேச முடியும்.....

தனி மனிதனாக நீங்கள் பேசியிருந்தால் கூட, நான் வணங்கிக்கேட்டிருப்பேன்....

மக்கள் வேறு, புலிகள் வேறல்ல என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த , புகைப்படம் இலவசமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.....

இன்னும் பேச வேண்டியுள்ளது நண்பா..... இருப்பினும்....

' பச்சைத்தமிழன் ' Srilankan (!) தோழரே ,
இணைந்தே போராடுவோம்.....

நான் பேசிவிட்டேன்.......
எம் மறவற்குடியின் பெண்புலிகள்
பேசவேண்டுமல்லவா ???
வருவார்............... அரசி.

ஒருவேளை.....
இயக்கத்தில்,  தங்கள் குறிப்பிட்டதைப் போன்று, ஒருவரின் சுயநலம் இருந்திருந்தால் கூட...
கண்ணைமூடிக்கொண்டு போராடுவோம்....
 ' தமிழீழம் காண ' ....

நிஜத்தைக் காண : http://www.facebook.com/notes/jaes-jey-roby/-the-real-comedy-pieces-of-lanka-puliyum-narikkuiyum/392954500870