Saturday, August 27, 2011

இதையும் கொஞ்சம் படிங்க .......




மேலுள்ள ' புகைப்படத்தில் ' உள்ளவரை நியாபகம் இருக்கிறதா ??!
சில மாதங்களுக்கு  முன்பு
பாகிஸ்தானில் முல்தான் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை காப்பாற்ற கூறி அகில இந்திய ஊடகங்கள் கூக்குரலிட்ட நபர்தான்  இவர் !!!!

இவரை தூக்கிலிட வேண்டும் என்று அச்சமயத்தில் இந்தியாவில் இருந்து ஒருவராவது குரல் எழுப்பியிருந்தால் அது
' மனிதாபமானமற்ற கொடூர செயல் ' ,
' இந்திய இரத்தம் உடையவன் அல்ல '
என்று தீர்க்கமாக கருதப்பட்டிருக்கும் !!!

ஆனால் ,

அதையே இன்று அப்பாவி உயிர்கள் மூன்று பேரை காப்பாற்றக் கோரினால் ,
 ' நீதிமன்ற அவமதிப்பு ' , தேச துரோகம் , ராசீவ் கொலைக்கு எதிரான அநீதி !!!!


எஸ் எம் கிருஷ்ணா என்னும் இந்திய புறம்போக்கு துறை அமைச்சரின் மனிதாபிமானமற்ற 'சதி ' . . . !!!

' பாகிஸ்தான் அரசாங்கம் சரப்ஜித் சிங்கிற்கு மனிதாபிமான அடிப்படையில் மரண தண்டனையை நீக்க வேண்டுமென்று ' இந்தியா சார்பாக கோரிக்கை வைத்தவர் இந்த எஸ் எம் கிச்சினா !!!

இப்பொழுது புரிகிறதா இந்தியர்களுக்கிடையே அரசாங்கம் காணும் பாகுபாடு ????

இதில் ' UNITY in DIVERSITY ' என்னும் பீற்றல் வேறு !!!

ஹசாரேவை ஆதரிக்கும் மார்வாடியோ , வட இந்தியனோ .... இப்பிரச்சினையை பற்றி பேசுவதை ,  தெரிந்து கொள்வதை , விவாதிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள்   !!!!
காரணம் ,
ஒரே பதில் ' இராசீவ் குற்றவாளிகள் ' என்று தவறாக குத்தப்பட்ட முத்திரை !!!

அன்னா ஹசரே ஏற்படுத்திய மாய போராட்டத்தில் ஒவ்வொரு இளைஞனும் தன்னை சே குவேராவாக , பகத் சிங் காக , நேதாஜியாக கற்பனை போராளியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் !!!!

அசாமில் ஐலோம் ஷர்மிளா புறக்கணிக்கப்பட்டது போல ,
தென்னிந்தியாவில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் !!!

சிந்திப்போம் !! செயல்படுவோம் !!!



ஆதாரங்கள் :


( http://economictimes.indiatimes.com/news/politics/nation/india-asks-pakistan-to-release-sarabjit-on-humanitarian-grounds/articleshow/9564706.cms )

SARABJIT SING , CASE HISTORY :

( http://en.wikipedia.org/wiki/Sarabjit_Singh )



GOPAL DAS CASE :
( http://asiancorrespondent.com/51259/pakistan-cancels-prison-sentence-of-indian-man/ )