Monday, May 9, 2011

இலங்கை படுகொலைகளை விசாரிக்ககோரி கையெழுத்து இயக்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.


ஐ.நா. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டியதன் நியாயத்தையும், சிறிலங்காவை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான நியாயத்தையும் தெளிவுபடுத்தும் நினைவுப்பத்திரம் ஒன்றில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு வழங்ககப்படும்.

எனவே ,

தோழர்கள் அனைவரும் உடன் கீழ் உள்ள சுட்டியை அழுத்தி ,  படிவத்தை தரவிறக்கி பிரதி எடுத்துக் கொள்ளவும் .
இறுதிப் பக்கத்தில் உங்களது பெயர் , தொடர்பு விபரம் , கையெழுத்து ஆகியவற்றை பதிவு செய்யவும்.



அல்லது


DOWNLOAD SIGN PETITION  '

தரவிறக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேரிடமாவது கையெழுத்துக்களை பெற்றால்தான் விரைந்து நமது இலக்கினை அடைய முடியும் .
கூடுதல் கையெழுத்துக்கள் பெறும்போது இறுதிப் பக்கத்தினை மட்டும் கூடுதலாக பிரதி எடுத்து இணைத்துக் கொள்ளவும்.

கையெழுத்து பதிவுகளை எமக்கு 13.05.2011 க்குள் கிடைக்கும்படி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன் .

தொடர்பு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் .

ஏற்கனவே பல முறை கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டிருந்தாலும் , தமிழ் மக்களின்   உத்தியோகபூர்வமான அரசாங்கத்தின் மூலம் நடத்தப்படுவதால் தயை செய்து மிக விரைந்து பொறுப்புணர்வுடன் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் !!!


மேலும் விபரங்கள் தேவைப்படின் ,
பின்னூட்டம் இடவும் !

நன்றிகளுடன் ,

~ ' தமிழ் சிறுவன் ' ~



சிறிலங்காவின் இனப்படுகொலைகள் பற்றிய விசாரணையை கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம்

இந்த முயற்சியில் ஒவ்வொரு தமிழரையும் செயற்றிறனுடன் பங்குபற்றுமாறு நாடுகடந்த தமிழீழ அரசு கேட்டுக்கொள்கிறது. தமிழராக பிறந்த ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டவர்களுக்கு நாம் செலுத்தும் ஒரு அஞ்சலியாக இது அமைகிறது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கத்தவர்கள் உலகெங்கும் உள்ள தமது தொகுதி மக்களிடம் மேற்படி கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளனர்.


சிறிலங்காத்தீவில் நிலவும் பயம் தரும் சூழ்நிலை காரணமாக தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் தமது விருப்பங்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலையில் தமிழ்மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்தும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் மீது விழுந்துள்ளது.


தமிழர் பகுதிகள் சிறிலங்கா இராணுவத்தினரால் நிரம்பியுள்ள நிலையில் படுகொலைகள், காணாமல் போதல், கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் போன்ற பாரிய மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதற்கும், சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்குமான தேவை குறித்த தமிழ் மக்களின் குரல் தெளிவாகவும் உரத்தும் ஐ.நா. செயலாளர் நாயகம் அவர்களுக்கு கேட்பதை உறுதிப்படுத்தும் கடமை புலம் பெயர்ந்த தமிழர்களினால் தெரிவுசெய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கு உள்ளது.

ஐ.நா. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டியதன் நியாயத்தையும், சிறிலங்காவை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான நியாயத்தையும் தெளிவுபடுத்தும் நினனவுப்பத்திரம் ஒன்றில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு வழங்கப்படும்.

போரின் இறுதிநாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டும், மக்கள் தொகையாக கொல்லப்பட்டும், பாலியல் வல்லுறவுகள் செய்யப்பட்டும், கட்டாயமாக காணாமல் போக செய்யப்பட்டும், பரந்தளவில் எறிகணைத்தாக்குதல்கள் செய்யப்பட்டும், உணவு மறுக்கப்பட்டும், மருந்துகள் மறுக்கப்பட்டும், செய்தியாளர்கள் பயமுறுத்தப்பட்டும் உள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர்களை கொன்றததற்காகவும், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதற்காகவும் சிறிலங்காவின் அரசதலைவர்களையும் இராணுவத்தினரையும் நீதியின் முன்னிறுத்துவதற்கான நாடுகடந்த தமிழீழ அரசின் முயற்சிகளின் தொடர்ச்சியே இந்த கையெழுத்து சேகரிப்பாகும். ஐ.நா. அறிக்கைக்கு எதிரான சிறிலங்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாடுகடந்த தமிழீழ அரசு நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழு பல்வேறு அரசுகளையும் சந்தித்து சிறிலங்காவின் ஐ.நா.வுக்கு எதிரான பிரச்சாரத்தை பற்றி விளக்கவுள்ளது. ஐ.நா. நிபுணர்கள் குழுவின் விசாரணையின் போது சிறிலங்கா பாரிய அளவில் தமிழ் பொதுமக்களை படுகொலை செய்தது பற்றி விளக்கமான அறிக்கையொன்றை நாடுகடந்த தமிழீழ அரசு சமர்ப்பித்து இருந்தது.


https://sites.google.com/site/ltezhilan/download/BKMPetition_Final.pdf?attredirects=0&d=1