Saturday, August 14, 2010

செஞ்சோலை படுகொலையின் - நான்காமாண்டு நினைவு நாள்

14.08.2006 , அன்று முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில், செஞ்சோலை காப்பகத்தில் கூடியிருந்த எம் இன சிறார்கள் மீது இலங்கை வான்படைகளால் நடத்தப்பட்ட இக்கொடூரத்தாக்குதலில் , ஏறத்தாழ 61 பேர் பலியாகினர் . 134 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிறீலங்கா வான்படையை சேர்ந்த 4  ' கிபிர் ' இரக விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். உலக அமைதி மற்றும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் அவ்விடத்தில் மேற்கொண்ட ஆய்வில், விமானங்கள் இவ்விடத்தை குறிவைத்தே தாக்கியதாகவும் , அப்பகுதியில் கிட்டத்தட்ட 10 குண்டு விழுந்த பள்ளங்களையும் , சில வெடிக்காத குண்டுகளையும் கண்டதாகவும் கூறியுள்ளனர் . மேலும், குண்டு விழுந்த இடங்களில் புலிகளின் இராணுவ நடமாட்டமோ அல்லது ஆயுத கட்டமைப்புகளோ இல்லையென்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். 
இத்தாக்குதலில் இறந்த மற்றும் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில் இருந்து இரண்டு நாள் முதலுதவி பயிற்சிக்காக வந்திருந்தனர் .
அனைவரும் 16 - 18 வயது வரை நிரம்பிய சிறார்களாவர் . 
இறந்தவர்களில் 51 பேர் மாணவர்கள் , நான்கு பேர் பணியாளர்களாவர்.


CLICK HERE for ENGLISH :  MASSACRE of ROSE BUDS