புலியின் பக்கம்



எட்டாக் கனி என்பது,
எங்கள் ஈழமல்ல....
உங்கள் அற்ப புத்திக்கு எட்டாது
எங்கள் விடுதலைப்போராட்டம்......

சர்வாதிகாரிகளும், காட்டிக்கொடுக்கிகளும்
உள்ளவரை,
போராட்டமின்றி அமையாது எங்கள் தாயகம்......


மக்களுக்காய் வெள்ளைக்கொடி காட்டி வந்தவர்களை,
வெட்டி வீழ்த்திய நயவஞ்சக கூட்டம் உங்களுடையது....
அமைதி பேசியே நாங்கள் மாண்டது போதும்...


 ' உயிர்பிச்சைக் கெட்டு' காலில் விழ,
' புலிகேசி ' அல்ல நாங்கள்....
புலிக்கொடி பொறித்த
மறவர் குடி வந்தவர்கள்...

உயிரினை ஒரு குப்பிக்குள் அடைத்து,
உதட்டுக்கு நேராக தொங்கவிட்டுள்ள
எங்களைப் பற்றி....
மதுக்குப்பிகளுக்கு விலைபோன
உங்களுக்கு தெரிய நியாயமில்லை.....

தலை உருளும் நாள் எண்ணிக் காத்திரு,
துரோகிகளின் தலை என்றும் தப்பாது...
அடிப்பட்ட புலி என்றும் விடாது....

எம் தாயகத்தின் காற்றிலேயே
ஒளிந்திருக்கும் நாங்கள்,
வெளிவரும் நாள்.........
உனக்கு அறுதியிட்டுக் கூறப்படும்
இறுதி நாள்.......

குள்ள நரி கூட்டத்தைக் கண்டு,
புலி என்றும் கலங்காது......
மறக்காதே....
பூனை மீதும் கோடுண்டு....

மீண்டு(ம்) வருவோம்....
தாயகம் பெறுவோம்...

நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்,
நாங்கள் விதைக்கப்படுகிறோம்....................

எம் தலைவன் காணாமலே போயிருந்தாலும் ( மன்னிக்க ! )
உனக்கு விலை கொடுத்தவனிடம் சொல்லிவிடு....

' விதைத்தவன் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை .......'

 - Lt.Ez......





புலிகளின் இ'ரை'யாண்மை...

மானுட வேட்டை போலில்லை 

புலிகளின் வேட்டை ..
அச்சுறுத்தினாலன்றி அவைதூக்குவதில்லை 
தம் நக ஆயுதங்களை ...
புலிகள் அமைதி விரும்புவை ...
தனித்து இருப்பவை...
தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை...
தன் எல்லைத் தாண்டி வராது 
புலிகள் எப்போதும் ...
புலிகளுக்கு உண்டு 
எல்லைத் தாண்டா இறையாண்மை.
புலி இனம் அழிந்து வருவதாக 
யாரும் சொன்னால் கூட நம்பாதீர்கள்...
காடுகளின் கம்பீரம் புலிகள்.
புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.
சிங்கமும் புலியும் 
ஒரு வனத்தில் வாழ்வதில்லை.
சிங்கமும் புலியும்
ஒரு போரில் மோதுவதில்லை.
மோதினால்...
புலிதான் வெல்லுமென்கிறது
வனங்களின் வரலாறு ...

ezhilanoneelam@gmail.com