Monday, May 9, 2011

இலங்கை படுகொலைகளை விசாரிக்ககோரி கையெழுத்து இயக்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.


ஐ.நா. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டியதன் நியாயத்தையும், சிறிலங்காவை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான நியாயத்தையும் தெளிவுபடுத்தும் நினைவுப்பத்திரம் ஒன்றில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு வழங்ககப்படும்.

எனவே ,

தோழர்கள் அனைவரும் உடன் கீழ் உள்ள சுட்டியை அழுத்தி ,  படிவத்தை தரவிறக்கி பிரதி எடுத்துக் கொள்ளவும் .
இறுதிப் பக்கத்தில் உங்களது பெயர் , தொடர்பு விபரம் , கையெழுத்து ஆகியவற்றை பதிவு செய்யவும்.



அல்லது


DOWNLOAD SIGN PETITION  '

தரவிறக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேரிடமாவது கையெழுத்துக்களை பெற்றால்தான் விரைந்து நமது இலக்கினை அடைய முடியும் .
கூடுதல் கையெழுத்துக்கள் பெறும்போது இறுதிப் பக்கத்தினை மட்டும் கூடுதலாக பிரதி எடுத்து இணைத்துக் கொள்ளவும்.

கையெழுத்து பதிவுகளை எமக்கு 13.05.2011 க்குள் கிடைக்கும்படி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன் .

தொடர்பு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் .

ஏற்கனவே பல முறை கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டிருந்தாலும் , தமிழ் மக்களின்   உத்தியோகபூர்வமான அரசாங்கத்தின் மூலம் நடத்தப்படுவதால் தயை செய்து மிக விரைந்து பொறுப்புணர்வுடன் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் !!!


மேலும் விபரங்கள் தேவைப்படின் ,
பின்னூட்டம் இடவும் !

நன்றிகளுடன் ,

~ ' தமிழ் சிறுவன் ' ~



1 comment:

  1. தோழரே, கையெழுத்து இடும் நண்பர் தான் மற்ற விவரங்களாகிய பெயர், ஊர், நாடு, கைபேசி எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டுமா, இல்லை அவற்றை நாம் எழுதிக்கொடுக்கலாமா???

    ReplyDelete