Monday, July 26, 2010

இந்திய கருணாக்களுக்கு........

========================================================
எட்டாக் கனி என்பது,
எங்கள் ஈழமல்ல....
உங்கள் அற்ப புத்திக்கு எட்டாது
எங்கள் விடுதலைப்போராட்டம்......
சர்வாதிகாரிகளும், காட்டிக்கொடுக்கிகளும்
உள்ளவரை,
போராட்டமின்றி அமையாது எங்கள் தாயகம்......
மக்களுக்காய் வெள்ளைக்கொடி காட்டி வந்தவர்களை,
வெட்டி வீழ்த்திய நயவஞ்சக கூட்டம் உங்களுடையது....
அமைதி பேசியே நாங்கள் மாண்டது போதும்...
' உயிர்பிச்சைக் கெட்டு' காலில் விழ,
' புலிகேசி ' அல்ல நாங்கள்....
புலிக்கொடி பொறித்த
மறவர் குடி வந்தவர்கள்...

உயிரினை ஒரு குப்பிக்குள் அடைத்து,
உதட்டுக்கு நேராக தொங்கவிட்டுள்ள
எங்களைப் பற்றி....
மதுக்குப்பிகளுக்கு விலைபோன
உங்களுக்கு தெரிய நியாயமில்லை.....

தலை உருளும் நாள் எண்ணிக் காத்திரு,
துரோகிகளின் தலை என்றும் தப்பாது...
அடிப்பட்ட புலி என்றும் விடாது....

எம் தாயகத்தின் காற்றிலேயே
ஒளிந்திருக்கும் நாங்கள்,
வெளிவரும் நாள்.........
உனக்கு அறுதியிட்டுக் கூறப்படும்
இறுதி நாள்.......

குள்ள நரி கூட்டத்தைக் கண்டு,
புலி என்றும் கலங்காது......
மறக்காதே....
பூனை மீதும் கோடுண்டு....

தவம் கோடி புரிந்தாலும்,
SRILANKAN பச்சைத்தமிழன் ஆக முடியாது ( so sorry)..

மீண்டு(ம்) வருவோம்....
தாயகம் பெறுவோம்...

நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்,
நாங்கள் விதைக்கப்படுகிறோம்....................
எம் தலைவன் காணாமலே போயிருந்தாலும் ( மன்னிக்க ! )
உனக்கு விலை கொடுத்தவனிடம் சொல்லிவிடு....

' விதைத்தவன் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை .......'
                                                                             - லெப்.எழிலனுக்காக.....

~ வீழாது வீரம், மண்டியிடாது மானம் ~
( துரோகிகளுக்கும் , இவ்வரிகளுக்கும் சம்பந்தமில்லை, so Don't Worry.... )

Saturday, June 12, 2010

சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு பச்சை கேள்வி!

ஈழப்பிரச்னை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.) தோழர்கள் எழுதிய நூல், பல தரப்பினரிடையே சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த நூலின் பெயர் ‘இலங்கை - துப்பாக்கிகள் மௌனித்த வரலாறு’ என்ற இந்நூலை எழுதியவர்கள் என்.மருத்துவமணி, மா.ராமசாமி...

ஈழப்பிரச்னையில் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை நிலைநாட்ட, இந்நூல் மூலம் திரும்பத் திரும்ப முயற்சிக்கின்றனர் இருவரும்.

தனி ஈழத்திற்கு எதிராக இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் மார்க்சிஸ்ட் லெனினிய அடிப்படையில் இல்லை. மாறாக, அவை தனி ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டை மேலும் கெட்டிப்படுத்தவே பயன்படும்.


‘நம் கையில் என்ன ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. நமது எதிரிகள்தான் தீர்மானிக்கின்றனர்’’ என்று அடிக்கடி கூறும் மார்க்சிஸ்டுகள், ஈழத்தில் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில்தான் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை உணராமல் போனது ஏன்?

அடுத்து, ஈழத்தில் அன்று நிலவிய ஜாதிப் பிரிவினைகளையும், முஸ்லிம் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் ஈழப்போராளிகளால் புறம் தள்ளப்பட்டது குறித்தும் தேவையற்ற விவாதத்தை வலிந்து இந்நூல் முன் வைக்கிறது. உண்மையில் போராளிகள் அனைத்து பிரிவுகளைச் சார்ந்தவர்களையும் ஜாதி, மத பேதமின்றி, சமமாகப் பாவித்தனர் என்பதே வரலாறு. ஆனால், இப்பிரிவினரிடையே மோதலை உருவாக்க இலங்கை
உளவுப்படை தொடர்ந்து முயற்சித்ததும், அதற்கு சில தலைவர்கள் உடன்பட்டதும் பிளவுக்கு வழிவகுத்தது என்பதை இந்நூலின் ஆசிரியர்கள் அறிந்தார்களா? இல்லை, மறைத்தார்களா?

அடுத்து. ஈழத்தில் இயங்கி வந்த சகோதர அமைப்புகளை விடுதலைப்புலிகள் திட்டமிட்டு அழித்துவிட்டதாக இந்நூலாசிரியர்கள் அங்கலாய்க்கிறார்கள். புலிகள் மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டு இது. இதுகுறித்து 1985 ஏப்ரல் 5ம் தேதியிட்ட ஃப்ரென்ட்லைன் ஆங்கில இதழில், கட்டுரையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் இவ்வாறு கூறியுள்ளார். ‘‘தனி ஈழம் கோரிக்கையில் உடன்பாடு இருந்தாலும், புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களை மற்ற இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளாததால், அவர்களிடையே பிளவு நிலவியது.’’ இப்பிளவு, மோதலாக வலுப்பெற்று, ஒருவரை ஒருவர் தாக்கும் நிலை ஏற்பட்டது. அதில் வலுவான புலிகள் வெற்றிபெற்றார்கள்.

ஆனால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) சேர்ந்த வரதராஜப் பெருமாள் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘‘தனி ஈழம் என்ற
பேச்சுக்கே இடமில்லை. அதனால் ஈழமக்களுக்குப் பெரிய ஆபத்துதான் விளையும்’’ என்று கூறியுள்ளார். புலிகளோடு முரண்பட்ட கருணா, தற்போது ராஜபக்ஷேவின் அமைச்சரவையில் இடம் வகிப்பதோடு, ஈழப்போரை காட்டிக் கொடுத்த ‘நவீன எட்டப்பன்’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இப்படிப்பட்டவர்களுடன் புலிகள் சமரச சகவாழ்வு வாழ்ந்திருக்கவேண்டும் என்று இந்நூலாசிரியர்கள் வலியுறுத்துகிறார்களா?

அது கிடக்கட்டும். இவர்கள் சார்ந்துள்ள கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் இந்தியாவில் சகோதரப்போரில் ஈடுபடவில்லையா? சீனப்போரின்போது, இவர்களில் ஒருசாரார் சிறை வைக்கப்பட்டபோது கட்சியின் மறுசாரார் அதை
ஆதரிக்கவில்லையா? கட்சி பிளவுபட்ட பின்பு, அவசர சட்டத்தின் கீழ் ஒருகட்சியினர் சிறையில் வதைபட்டபோது, அதன் சகோதரக்கட்சி ஆட்சியாளர்களுக்கு வெண் சாமரம் வீசிக்கொண்டிருக்கவில்லையா? பின்னர் 1968ல் சி.பி.எம்.மிடமிருந்து பிரிந்தவர்கள் தானே இன்றைய மாவோயிஸ்டுகள். தற்போது, மே.வங்கத்தில் இந்தச் சகோதரர்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்து, சகோதரப்போரில் மாண்டு கொண்டிருப்பது ஏன்?

புலிகள் மீது இந்நூலில் இவர்கள் வைக்கும் அடுத்த குற்றச்சாட்டு, ‘‘போர் மீது
அவர்களுக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. கடந்த காலங்களில் போர்
நிறுத்தங்களை தன்னிச்சையாக உடைத்தவர்கள் அவர்கள்.’’

ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டாலும், அதை அமல்படுத்துவதில் ஆரம்பத்தில் புலிகள் முழு ஒத்துழைப்பை அளித்தனர். ஆனால், ஒப்பந்தப்படி தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தத்தை இலங்கை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இந்தப் போர் நிறுத்தத்தையும் ஒப்பந்தத்தையும் பல கட்டங்களில் மீறியது இலங்கை அரசுதான் என்பதை இந்திய அமைதிப்படையின் தளபதி ஏ.எல்.கல்கத் தெளிவாகக் கூறியுள்ளார்.

அடுத்து, நார்வே தூதுக்குழுவின் மேற்பார்வையில் நடைபெற்ற
பேச்சுவார்த்தையின்போது, புலிகள் முன்வைத்த இடைக்கால சுயாட்சி திட்டத்தை பிரதமர் ரணில் ஒப்புக்கொண்டபோதும், அதிபர் சந்திரிகா அதனை
ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, நார்வே தூதுக்குழுவையே வெளியேறச் சொன்னார். இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பு? நேட்டோ அணியில் நார்வே இருப்பதைச் சுட்டிக்காட்டி, நார்வே தூதுக்குழுவை அமெரிக்காவின் கைக்கூலிகள் என்ற ரீதியில் இந்நூலாசிரியர்கள் வசைபாடுவதோடு, ரணிலையே அமெரிக்காவின் அடிவருடி என்ற அளவில் நா கூசாமல் கூறுகிறார்கள். இவர்கள் யார் பக்கம்? ஏனெனில், அதே அமெரிக்கா, பயங்கரவாத இயக்கம் எனக் கூறி விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்தது.

அதற்கு முன்பு இந்திராகாந்தி-யுடனான ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனே மீறியதால்தான், தனி ஈழம் என்ற கோரிக்கையையும், அதன் போராளிகளையும் இந்திராகாந்தி ஆதரித்தார். புலிகள் செய்த மிகப்-பெரிய தவறு, ராஜீவைக் கொலை செய்ததுதான் என்று இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதை முட்டாள்தனமான செயல் என்பது தான் சரியாக இருக்கும். அதேபோல், ‘புலிகள் ஆயுதப்போராட்டத்தை முழுக்க நம்பி, வெகுஜன இயக்கங்களை பின்னுக்குத்தள்ளிவிட்டனர். அதுதான் கடும் தோல்வியில் முடிந்தது’ என்கிற ரீதியில் இவர்கள் சொல்லியிருப்பதும் ஏற்கத் தக்கதே. மேலும் பல தவறுகளை செய்திருந்தாலும் ஈழப்போரில் புலிகளின் அளப்பரிய தியாகங்களையும் உறுதியையும் யாராலும் மறுக்கமுடியாது.

ஈழப்போரில் தமிழர்களை கூண்டோடு கொன்று குவிக்க, இந்தியா வழங்கிய ஆயுதங்கள் உதவின என்று கூறும் இவர்கள், தங்களது தோழன் சீனா செய்த உதவியை மறைப்பதேன்? தெற்காசியாவில் தங்கள் மேலாண்மையை நிறுவ, இந்தியாவும் சீனாவும் கடும் போட்டியில் இறங்கி உள்ளதால்தான், பேரினவாத மற்றும் மதவெறி பிடித்த இலங்கை அரசுக்கு போட்டிபோட்டு உதவுகின்றன என்று பேருண்மையை இவர்கள் நூலில் எங்காவது சுட்டிக்காட்டியிருக்கிறார்களா? என்று தேடிப் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.


ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை உள்நாட்டுப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்கவேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியாவுடன் சீனாவும் சேர்ந்து தோற்கடித்து, இன அழிப்புப்போரில் கோர நர்த்தனம் ஆடிய இலங்கை பேயாட்சியைத் தப்பிக்கச் செய்ததையும் இவர்கள் சுட்டிக்காட்டவில்லை. தங்கள் தோழன் சீனா கோபித்துக் கொள்ளும் என்ற பயமா?

மேலும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து, ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை (Stalin on Nationality Question) இவர்களும் இவர்களைச் சார்ந்தவர்களும் படிப்பது நல்லது. பிரிந்து போகும் உரிமை யாருக்கு உள்ளது என்பது குறித்து மூன்று முக்கியக் காரணிகளை ஸ்டாலின் வரையறுத்துள்ளார்.

1. அவர்கள் பொதுவான ஒரு மொழி பேசும் தனி இனமாக இருக்கவேண்டும். ஜாதியோ, மதமோ ஓர் இனத்திற்கான அடையாளங்கள் ஆகமாட்டா.

2. அந்த இனம் தொடர்ச்சியான நிலப்பரப்பில், பாரம்பரியமாய் வாழ்ந்து வரவேண்டும்.

3. அவர்களின் மொழி, கலாசாரம் போன்ற அடையாளங்கள் பேரினவாதத்தால் அழிக்கப்பட்டும், அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டும், ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகள் அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டும் வந்திருக்கவேண்டும். இந்த வரையறைகள் ஈழத்தமிழருக்குப் பொருந்துமா? இல்லையா? என்று இவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். பிரிட்டனிடமிருந்து தனிநாடு கோரிப்போராடிய அயர்லாந்து மக்களை ஆதரித்து, கார்ல் மார்க்ஸ் எழுதியுள்ளதை இந்நூலாசிரியர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

‘‘இங்கிலாந்தில் உள்ள ஆளும் வர்க்கம் அயர்லாந்து விவகாரத்தில் என்ன கொள்கையைக் கடைப்பிடிக்கிறதோ, அந்தக் கொள்கையைத்தான் அங்குள்ள பாட்டாளி வர்க்கமும் (தொழிலாளர் கட்சி)கடைப்பிடிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள பாட்டாளி வர்க்கம் அயர்லாந்தில் இயங்கும் தேசிய விடுதலை இயக்கத்துடன் இணக்கமான கொள்கையை வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், இவ்வாறான ஒடுக்கும் நாடுகளில் எழும் வர்க்கப் போராட்டத்திற்கும் நசுக்கப்படும் தேசங்களில் எழும் தேசிய எழுச்சிகளுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத தொடர்பு உண்டு.’’ மேற்கண்ட மார்க்சின் கூற்றில் இங்கிலாந்துக்குப் பதிலாக இந்தியாவையும் அயர்லாந்துக்குப் பதிலாக தமிழ் ஈழத்தையும் பொருத்திப் பார்த்தால், இன்றைய நிலை தெளிவாகும்.

இறுதியாக, இந்நூலில் தரப்பட்டுள்ள சிங்களப் பெண் எழுத்தாளர் ரசியா பரூக்கின் கூற்றையே, இந்த நூலாசிரியர்கள் மீண்டும் படிப்பது நல்லது.

‘‘பிரபாகரன் ஒன்றும் திடீரென தீவிரவாதியாக முளைத்துவிடவில்லை. அப்படி ஒரு மாபெரும் சக்தியாக உருவாக, அவருக்கு வலுவான காரணங்கள் இருந்தன. இந்தக் காரணங்கள் கண்டறியப்பட்டு, தீர்வு காணப்படவேண்டும். இல்லாவிடில், 26 ஆண்டுகால போருக்குப்பின் நாம் பாடம் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் பொருள். பாடத்தை ஒழுங்காகப் பயிலாதவர்கள், அந்தப் பாடத்தையே மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிவரும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் உணரவேண்டிய உண்மை!’’

( நன்றி : கலை ) ~ இளம்புலி ~

Friday, June 4, 2010

வலிகள்.. வரிகள்......

அழுதது போதும்,
இன்னும் எத்தனைப்பேரை இழந்துவிட்டு
இரங்கல் கூட்டங்கள் நடத்தப்போகிறோம் ??
கவலைப்பட்டது போதும்,
கையாலாகாத தனத்தின் துவக்கம்
......கவலையும், கண்ணீரிடுவதும் !!
அழுது, அஞ்சலிகள் செலுத்திக்கொண்டிருந்தால்
கிட்டாது நம் தேசம்...!!
நாம் உயிர்வாழ,
நாம் முயற்சியெடுக்கும்வரை
என்றும் வாழவைக்காது,
பிணம்தின்னும் ' உடன்பிறப்பு '...
மானமிழந்து,
கோழையாய்,
கேடுகெட்டு
வாழ்வதை விட
எவ்வளவோ மேலானது,
' மரணத்துள் வாழ்தல் ' ... !! J

Saturday, May 22, 2010

எங்கள் ஈழம்.....


வானோடி வந்தால்
நீ கைக்காட்டி ரசிக்கிறாய்,
உனக்கு அது வேடிக்கை .
நானோ,
நண்பர்களுடன்
பதுங்கு குழி தேடி அலைகிறேன் ,
இதுவே எங்களுக்கு வாடிக்கை......


குறும்படம் :      http://www.youtube.com/user/karthiksubbaraj#p/a/u/2/spkxWbDt-bQ

அம்மா........


        அம்மா....................................
உங்கள் கால்களில் விழுந்து மன்னிப்புக்கேட்கிறேன்..
இதயமில்லா இக் கயவர் கூட்டத்தில் இருந்து உங்களைக் காக்க முடியவில்லை...
ஓநாய்க்கூட்டத்திற்கு தாயை பலிக்கொடுத்து பரிதவிக்கும்
ஆட்டுக்குட்டியின் வலி......!!!
நாடற்ற குடிகளுக்கு
நிகரற்ற தலைவனைக் கொடுத்த உங்களை
அரவணைக்க முடியாமல்
நாதியற்று போய் கிடக்கிறோம் ....
தமிழின தலைவனும் (!), தென்னாட்டு பிரபாகரனும்
சாமரம் வீசி உறங்க,
உயிர்களில் விரிசல் விழ விழித்திருக்கிறோம்...
அண்ணன்களின் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கவும் தெம்பின்றி,
காய்ந்து போன கண்ணீர் சுவடுகளுடன் காத்திருக்கிறோம் !!!
தோள்கள் வலித்தாலும்,
நாடெங்கும் உன்னை தூக்கி நடப்போம்
நீ நலம் பெறும்வரை.
துக்கங்கள் கிழித்து
கருவிழியும் பொசுங்கி,
கண்ணீரும் வற்றி விட்டது, நீயில்லாமல்............
மீண்டு(ம்)  வருவாயா ???
இப்படிக்கு,
துரோகிகளுக்கு தாயை பறிக்கொடுத்த புதல்வர்களும், புதல்விகளும்.....  இளம்புலி ;-(

Wednesday, March 10, 2010

புலியும் , நரிக்குட்டியும்

இலங்கையிலிருந்து ' பச்சைத்தமிழன் ' (!) :

நீங்கள் இங்கு தலைவர் என்று இங்கு குறிப்பிடுவது கடைசி யுத்தத்தில் தன் உயிர் காக்க எதிரியின் காலில் விழுந்து கதறி உயிர் பிச்சை கேட்ட அக் கோழையையா ?
அவனா உங்களுக்கு தமிழீழம் வாங்கித்தரப்போகிறான் ?

உண்மை என்னவெனின் ... 
"உங்கள் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல ! அது ஒரு பணத்துக்கான பகிரங்கப்போராட்டம் !!! இன்னும் கூறப்போனால் அது ஒருவகை களவு , பகற்க்கொள்ளை , வழிப்பறி !!!
இவற்றை இரும்புக்கரம் கொண்டு தானே அடக்க வேண்டும் !
அது தான் இங்கும் நடந்தது. 


......... :

கடைசித் துடிப்புள்ளவரை,
தன்மக்களின் விடுதலையை எதிர்நோக்கி
இறந்தானே ' மாவீரன் திலீபன் '... அவன் போட்டது வெறியாட்டமா ??

ஒற்றைக்காலோடு, தன் மக்களின் அமைதிக்காக,... See more
உலகமெங்கும் சமாதானம் தேடி சுற்றிவந்தானே.....
' SMILING TIGER ' என உலக நாடுகள், ஏன் இலங்கையே அழைத்த சுப.தமிழ்செல்வன் போட்டது வெறியாட்டமா......

இவர்களை கொன்று போட்டவர்கள் என்ன அவதாரமா ?? 

நீங்கள் பேசவில்லை தோழர்...
நீங்கள் இருக்கும் மண்ணும்,அதன் மைந்தர்களும் பேச வைக்கிறார்கள்.....

ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில், எங்கள் போராட்டம் உங்களுக்கு இப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்......

எது எப்படியோ...........
- தமிழர்களின் தாகம் ,
தமிழீழ தாயகம் -

நாங்கள் தேர்ந்தெடுத்த பாதை வேண்டுமானால்
தவறாக இருக்கலாம்...
ஆனால் எங்கள் குறிக்கோள்... ' தமிழீழம் '


நம்ப ஆளு :

நிச்சயமாக நானும் இன விடுதலைக்கான போராட்டத்தை அனுசரிக்கிறேன் தோழனே !
ஆயினும் நடந்தது எதுவுமே விடுதலைக்கான போராட்டமே அல்ல என்பது தான் என் கருத்து !

ஒரு தலைமையை வைத்துத்தான் உங்கள் போராட்டம் பற்றியோ மற்றும் அதன் வீரியம்  பற்றியோ மற்றையோர் கணிக்க முற்ப்படுவர் என்பது பொது வழக்கு ! ஆகவே நீங்கள் 'புனிதர்கள்' என்றுரைக்கும் மாவீரன் திலீபன் , சுப.தமிழ்செல்வன் என்போர்கள் தனியே போராடவில்லை ! அவர்களும் உங்கள் கேடு கெட்ட தலைவன் எனும் சாக்கடைக்குள் தானே பூத்துள்ளார்கள் ! 
சாக்கடைக்குள் பூத்த பூக்களை எவரும் சூடிக்கொள்வதில்லை ! ஆகவே அவர்கள் செய்தது தியாகம் ஆக இருப்பினும் கூட அவை உங்கள் சாக்கடைத்தலைவனால் களங்கப்படுத்தப்பட்டவை !.... 

யாருக்காக இவ் விடுதைலைப்போராட்டம் தமிழ் மக்களுக்காகவா ?
அவ்வாறு எனின் அதை அவர்களின் துணையுடன் போராட வேண்டுமல்லவா ! 
அவ்வாறு போராடுபவன் என்று கூறிக்கொள்பவன் அம்மக்களின் ஒரு அங்கமாக அல்லவா இருந்திருக்க வேண்டும் ! தன் ஆளுமைகளுக்கு உட்ப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை எனினும் அவன் தன் உறவுகளாக அல்லவா பாவித்திருக்க வேண்டும் ! 

அவர்கள் நலத்துக்காக தன் நலத்தை துறந்தவன் தானே அவர்களின் தலைவனாக இருந்திருக்க முடியும் ! ஒரு போராட்டம் எனின் தாக்குதல்கள் , இழப்புக்கள் , வெற்றிகள் , தோல்விகள் என அனைத்தும் நடந்தேறும் ; அவ்வாறான காலங்களில் தலைவன் எனப்படுபவன் களத்தின் முன்னின்று தன் மக்களை அல்லவா காக்க வேண்டும் (தன் உயிரை கொடுத்து எனினும்) !. 

இப்பொழுது கூறுங்கள் உங்கள் தலைவனோ , அவன் நாசகார படைகளோ இவ்வாறு தான் நடந்து கொண்டதா ? இல்லை ! நிச்சயமாக இல்லை !!!

இது தமிழ் மக்களுக்கான விடுதலைப்போராட்டம் அல்ல ! நடந்தது அவர்களின் பெயரால் ஒரு சுயநலவாதி தலைமையிலான ஒரு சிறு குழு தன் தலைமுறைகளுக்கான சொத்துக்களை சேர்த்து கொள்வதற்கான ' பணத்துக்கான பகிரங்க போராட்டம்' ! 

இல்லை எனின் அவன் மக்களின் வீட்டுத்தேவைகளுக்கான பொருட்களுக்கு எனினும் வரி வசூலிப்பு நடந்திருக்காது ! , அம்மக்களின் வாக்குரிமையை சண்டித்தனத்தால் அவன் எதிரி என கூறிக்கொள்ளும் தரப்புக்கு விற்று பெரும் தொகை பணத்தை தான் பெற்றிருக்க மாட்டான் ! , இறுதி யுத்தத்தில் தன்னால் கொண்டு சேர்க்க முடியாத பணத்தை யாரும் உபயோகிக்க முடியாத படி வாகனத்துடன் கொளுத்தி இருக்க மாட்டான் ! 

தமிழ் மக்களுக்காக போராடும் தலைவன் தன் மக்களுடன் மக்களாக வாழ்ந்திருப்பான் ! அவர்கள் குடிசையில் அல்லல் பட தான் சொகுசு மாளிகையில் வாழ்வானா ? , (சிறந்த தலைவன் தன் மக்களை தன் நிலைக்கு உயர்த்த வேண்டும் , இல்லையேல் அவர்கள் நிலைக்கு தான் வந்திருக்க வேண்டும் ) 
, ஒரு தலைவன் தன் குடிகளின் பார்வைக்கு ' துளி வேண்டி நிற்கையில் பெரு மழையாக வர வேண்டும் என்கிறது தமிழ் வீரக்காப்பியங்கள் ! ஆயினும் உங்கள் தலைவன் ஒரு சிறு துளியாகக்கூட இருக்க வில்லையே ! அவ்வாறு எனின் அவன் எவ்வாறு ஒரு சிறந்த தலைவன் ஆக இருந்திருக்க முடியும் ?


........  :

உண்மையை எதிர்க்க அதிகம் பேச வேண்டியுள்ளது....ம் ம் ம் .....

உமது பேச்சில், நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை..... ஆனால், காரணங்கள் வேறு......

பூட்டியிருக்கும் வீட்டுக்குள் அமர்ந்து யார்வேண்டுமாயினும் விமர்சிக்க முடியும்......

ஆனால், வீதியில் இறங்கி போராட ???

எங்கள் பணியை நாங்கள் செவ்வனே செய்து வருகிறோம்... நமக்குள் இருவேறு பாதைகள் இருப்பினும்......

நினைவில் கொள்க...... ' சேருமிடம் ஒன்றே ' .

வெள்ளைக்கொடி காட்டியது,  சிறிய நிலப்பரப்புக்குள் சுருக்கப்பட்ட மக்களை காக்கும் இறுதி முயற்சிதானே தவிர,
உயிர்ப்பிச்சைக் கேட்டு அல்ல..........

உயிரைக் குப்பிக்குள் அடைத்து போராடும் இவர்கள் ஏன் உயிர்பிச்சைக்கேட்க வேண்டும்....
உயிர்ப்பிச்சைக் கேட்டவனைக் கொள்வதுதான் 
' மாவீரன் ' (!) ராஜபக்சே வின் நீதியா ??
ஒரு மனிதனாய்க் கூட நடந்துக்கொள்ள முடியாத அவனுக்கு வக்காலத்து வேறு....

உம் பின் நின்று பேடியைப் போல் பேசுகிறானா அவன் ??!!

சுப.தமிழ்ச்செல்வனை ஏன் வான்படைக் கொன்றது ??? அந்த தியாகமும் எம்முடையது தானே ??
திலீபன் பூட்டிய அறைக்குள் உணவின்றி இறந்தானா ??? அவரைப் பெற்றவரும் தமிழ்த்தாய் தானே....??? கைகள் கட்டப்பட்டா திலீபனும், தமிழ்ச்செல்வனும் கொல்லப்பட்டார்கள் ??

ஐக்கிய நாடுகள் சபை சொல்வதை கவனியுங்கள் :
 ' LTTE's are not the cause of  WAR,
They are just the outcome of the Cause.....'

இது விடுதலைப் போராட்டம்.
பிறக்கும் குழந்தைக் கூட 
ஆயுதத்தோடுதான் பிறக்கும் .....


இறுதி வரை..............

80000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற அந்த நாயைப் ( நாய்கள் மன்னிக்க ! ) பற்றி,
ஓரிடத்திலாவது குறிப்பிட்டதுண்டா....???

தலைவனை நாங்கள் தானே பாதுகாத்தோம்....!!!
பதுங்கு குழியில் வாழ வைத்தோம்.....!!!

வாய்வார்த்தைக்கு நன்றாக சொன்னீர்கள் '' நானும் விடுதலைப்போராட்டத்தை ஆதரிக்கிறேன் "என்று.....

உண்மையாய் இருப்பினும் ,
உம் கள்வர்கள் குகையில் இருந்து கூக்குரலிடுவது
சரிவராது. வார்த்தைகள் பலனற்றுப் போகும்...

' இரசாயன தீக்குண்டுகளும்,  கொத்தாணிக்குண்டுகளும் எறியப்பட்ட வேளையில், நாங்கள் தனியொரு மனிதனாக வீதியில் இறங்கி போராடி சிறைச் சென்ற போது,
எங்கே போயிருந்தீர்கள் ???
எம் மக்கள் மீது இந்தியாவும் சீனாவும் மாறி மாறி தாங்கிகள்  ஏற்றி வளம் வந்தனவே......
எங்கே சென்றீர்கள் ??
' செஞ்சோலை ' தாக்குதல் தெரியுமோ ???
பூக்கள் வெடிமருந்தில் கருகியதை கண்டிருக்கிறீரா ??
தொலைக்காட்சிகளில் எம் மக்கள் மரணம் கண்டு களித்தீரோ ???

நியாயம் பேசுவதற்கே ஒரு யோக்கியதை வேண்டும் தோழரே.....

ராஜபக்சே ( தூ !) கும்பலில் இணைந்துக் கொண்டு,
யார்வேண்டுமாயினும் பேச முடியும்.....

தனி மனிதனாக நீங்கள் பேசியிருந்தால் கூட, நான் வணங்கிக்கேட்டிருப்பேன்....

மக்கள் வேறு, புலிகள் வேறல்ல என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த , புகைப்படம் இலவசமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.....

இன்னும் பேச வேண்டியுள்ளது நண்பா..... இருப்பினும்....

' பச்சைத்தமிழன் ' Srilankan (!) தோழரே ,
இணைந்தே போராடுவோம்.....

நான் பேசிவிட்டேன்.......
எம் மறவற்குடியின் பெண்புலிகள்
பேசவேண்டுமல்லவா ???
வருவார்............... அரசி.

ஒருவேளை.....
இயக்கத்தில்,  தங்கள் குறிப்பிட்டதைப் போன்று, ஒருவரின் சுயநலம் இருந்திருந்தால் கூட...
கண்ணைமூடிக்கொண்டு போராடுவோம்....
 ' தமிழீழம் காண ' ....

நிஜத்தைக் காண : http://www.facebook.com/notes/jaes-jey-roby/-the-real-comedy-pieces-of-lanka-puliyum-narikkuiyum/392954500870