கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அவர்கள் , புதுச்சேரியின் ' இந்திரா நகர் ' காங்கிரஸ் வேட்பாளர் திரு.ஏ.கே.டி.ஆறுமுகம் அவர்களை ஆதரித்து பிரசாரம் பண்ணிக்கொண்டிருந்தார் . அப்போது அவர் பெண்களைக் குறித்து ' அருமையாக ' பேசிய வார்த்தைகளை கீழே காணொளியில் காணலாம் !!!! #defeatcongress
எதிர்வினை :
இப்பேச்சுக்கு பொதுமக்களிடம் ஏற்பட்ட எதிரொலி குறித்து , விரைவில் பதிவிடுகிறேன் .
. . . சில மணித்துளிகளாக தொலை ஊடகங்கள் எங்கும் திரை நிரப்பிக்கொண்டிருந்தன இவ்வார்த்தைகள் !
முகநூலிள் கூட எக்கசக்க ' பகிர்வுகள் ' மொய்த்திருந்தன !!!
சாரு அண்ணனின் வலைதளத்தில் ' ஞாநி ' ஏதோ எழுதியிருந்ததாக ' மனுஷ்யப் புத்திரன் ' அவர்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் . !!!
ம்ம்ம்.....
கிட்டத்தட்ட நான் நினைத்திருந்ததை முழுதாக உணர்ந்து எழுதியிருந்தது போலிருந்தது அப்பதிவு .
அதன் சுருக்கம் இதுதான் ,
' அன்னா ஹசரே அவர்கள் இந்த போராட்டத்தில் இறப்பதற்கு முன்பு , மணிப்பூர் என்றொரு மாநிலமும் , ஐரோம் ஷர்மிளா என்றொரு அறியப்படாத கதாநாயகி இருப்பதையும் அவருக்கு யாராவது முதலில் கற்றுக் கொடுங்கள் !!!! '