Sunday, August 14, 2011

செஞ்சோலை படுகொலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு







இலங்கையில் பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்பட்ட கொடூர விமான தாக்குதலில் கொல்லப்பட்ட இளஞ்சிறார்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் !!!!!!


இப்படுகொலையினைப் பற்றி NESHOR எனப்படும் வடக்கிழக்கு பிராந்தியத்துக்கான மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள ஆதார அறிக்கைகள் , காணொளிகள் !!!


இதைக் கண்டபின் அச்சம்பவத்தை கண் முன் நிறுத்தி கூறுங்கள் ,
ஏன் தமிழீழம் கேட்க கூடாதென்று !!!!!!!!




ஆங்கிலத்தில் :  MASSACRE of  ROSE BUDS









aNESHOR அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகள் :





BKM Petition_Final.pdf                                                                                                                                                                              
Sensolai.pdf
Type : pdf








14.08.2006 அன்று .........
முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில், செஞ்சோலை காப்பகத்தில் கூடியிருந்த எம் இன சிறார்கள் மீது இலங்கை வான்படைகளால் நடத்தப்பட்ட இக்கொடூரத்தாக்குதலில் , ஏறத்தாழ 61 பேர் பலியாகினர் .
134 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


சிறீலங்கா வான்படையை சேர்ந்த 4  ' கிபிர் ' இரக விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
உலக அமைதி மற்றும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், விமானங்கள் அவ்விடத்தை குறிவைத்தே தாக்கியதாகவும் , அப்பகுதியில் கிட்டத்தட்ட 10 குண்டுகள் விழுந்த பள்ளங்களையும் , சில வெடிக்காத குண்டுகளையும் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளனர் . மேலும், குண்டு விழுந்த இடங்களில் புலிகளின் இராணுவ நடமாட்டமோ அல்லது ஆயுத கட்டமைப்புகளோ இல்லையென்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் இறந்த மற்றும் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில் இருந்து இரண்டு நாள் முதலுதவி பயிற்சிக்காக வந்திருந்தனர் .

அனைவரும் 16 - 18 வயது வரை நிரம்பிய சிறார்களாவர் .
இறந்தவர்களில் 51 பேர் மாணவர்கள் , நான்கு பேர் பணியாளர்களாவர்.
இந்த இடமானது சுனாமி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு , பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பெண்பிள்ளைகளுக்கான காப்பகமாகும்.
இதை , இராணுவ தரப்பு ' புலிகளின் சிறார் பிரிவு இராணுவத்தின் பயிற்சி மையம் ' என்று குற்றம் சாட்டி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது !!!


இதைப்பற்றிய ஒரு முழுமையான பதிவு - ஆதாரங்களுடன் .  . . .

இங்கே சொடுக்குக :

செஞ்சோலை படுகொலையின் - நான்காமாண்டு நினைவு நாள்



No comments:

Post a Comment